நாகேஷ் - சில பதிவுகள் (3)

on Friday, December 30, 2011
"அபூர்வ சகோதரர்கள் படத்துல ஒரு சீன்ல நாகேஷ் சிங்கத்துக்கிட்ட சிக்குற மாதிரி வரும். அந்த ஷாட்டை டூப் போட்டு எடுத்துட்டு இருந்த போது நாகேஷ் சார் அங்க வந்தார்.. இதுக்கெல்லாம் எதுக்கு டூப்பு.. நானே நடிக்குறேன் என்று ஒத்த கால நின்னார்.. நானும் "இல்ல சார்.. ரிஸ்க்கு.. நிஜ சிங்கத்த பாத்தா பயம் இல்லையா ன்னு கேட்டான்.." அதுக்கு அவரு "வீரன் போர்ல தான் சாகணும், வியாதில இல்லன்னு" சொல்ல நாங்க எல்லாரும் நெகிழ்ந்துட்டோம்.. உடனே, "அட உங்கள கலாய்க்க சொன்னதுப்பா.. இந்த மாதிரி எத்தன சிங்கத்த பார்த்திருப்பேன் " ன்னு டைமிங்கா காமெடி பண்ணார்.. என்னோட ஒரு நாடகத்துல முதலில் ஒரு பைத்தியக்கார காரெக்டர் வரும், அடுத்து வாறவரும் லூசு மாதிரியே பேசுவாரா.. அதைப்பார்க்கும் ஹீரோ "அட நீயும் பைத்தியமா " ன்னு கேட்பார்.. அந்த காட்சியை பார்த்த நாகேஷ் "ஏன்பா, காமெடிக்கு பொழிப்புரை போடுறிங்க.. ரெண்டாவது வாறவர பார்த்து "நீயுமா" ன்னு கேட்ட போதும்.. "நீயும் பைத்தியமா " ன்னு ரெண்டு வார்த்தைய வீணடிக்காதிங்க " ன்னு சொன்னாரு. வார்த்தைகளை கௌரவப்படுத்திய கலைஞர் அவர்.. இறப்பதற்கு முதல் என்னோட "சாக்லட் கிருஷ்ணா" நாடகம் பார்க்க வந்தார். "உடம்பு சரியில்ல மோகன், சீக்கிரம் கிளம்பிடுவேன்" சொன்னவரு நாடகம் முடியும் வரை இருந்து பார்த்தாரு... மறுநாள் போன் பண்ணி ஒன்றரை மணிநேரம் பாராட்டினார்.. நாடகத்து மேல அவர் வச்சிருந்த பாசமும் மரியாதையும் அப்படிப்பட்டது...."



-கிரேஸி மோகன்

0 comments:

Post a Comment