எல்லோருக்கும் எல்லோரும் நல்லவரில்லை.
யாரோ ஒருவன் யாருக்காகவோ வேண்டுதல் செய்கிறான் சபிக்கவும்
செய்கிறான்.
கொலைகாரனுக்கும் கொல்லப்பட்டவனுக்கும் இருவேறு நியாயங்கள்.
எடுக்கப்பட்டதற்கும் கொடுக்கப்பட்டதற்கும் ஏதோ ஒரு காரணம்.
எல்லாத் தீர்ப்புகளிலும் ஒருவன் சிரிக்கிறான் மற்றொருவன்
அழுகிறான்.
நீங்கள் மழையை ரசித்த தருணங்களில் குடிசை இல்லாதவன் குளிரால்
நடுங்குகிறான்.
விற்கிறவனுக்கும் வாங்குகிறவனுக்கும் ஏதோ ஒரு தேவை.
உடம்பை விற்ற பணத்தில் உடைகளும் வாங்கப்படுகின்றன.
சொல்லப்படாமலும் ஏற்கப்படாமலும் – சில மன்னித்தல்கள்
மனதிலேயே விக்கி நிற்கின்றன.
கர்ணனின் பார்வையில் துரியோதனன் நண்பன். திரெளபதிக்கு ?
எல்லோருக்கும் எல்லோரும் நல்லவரில்லை.
நன்றி – தஞ்சை சூர்யா
0 comments:
Post a Comment