நாகேஷ் - சில பதிவுகள் (1)

on Wednesday, December 28, 2011
"நெஞ்சில் ஒரு ஆலயம்" படத்திற்காக வாய்ப்பு கேட்டு வந்த நாகேஷ் ஐ வர சொல்லி இருந்தேன். குழந்தையை காணாமல் கம்பவுண்டர் தேடும் காட்சி அது. ராமாராவ் நடிக்க வேண்டிய பாத்திரம் அது, ஆனால் அவர் வராததால் நாகேஷ் நடித்தார். படுக்கைக்கு கீழே குனிந்து குழந்தையை தேடும் காட்சி அது. ஆனால் நாகேஷ் என்ன செய்தார் தெரியுமா ?? படுக்கை தலையணையை தூக்கிபார்ப்பதும் படுக்கை அருகே இருந்த பீராவை திறந்து பார்ப்பதுமாய் அவர் செய்த அட்டகாசம் ஸ்பாட்டில் எல்லாரையும் சிரிக்கவச்சுது, என்ன அப்படியே அசரவச்சுது.. கல்யாண்குமார் கூப்பிட்டவுடன் இவர் வேகமாக ஓடிவரவேண்டும்.. நடிப்பு தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர் படிக்கட்டில் விழுந்து எழுந்தது மறக்கவே முடியாது.. என் சம்மதம் இல்லாமல் என் காரெக்டர்களை எதுவும் செய்ய நான் அனுமதிப்பதில்லை.. நாகேஷ் ஐ தவிர.. ஏன் என்றால் நான் நாகேஷ் ரசிகன்

- ஸ்ரீதர்



0 comments:

Post a Comment